திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (19:35 IST)

ரெட்மி 4A ரூ.1-க்கு பிளாஷ் விற்பனையில்... சியோமி நிறுவனம் இரண்டு நாள் அசத்தல் ஆஃபர்!!

சீன் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி அந்நிறுவனத்தின் ஆண்டு விழா சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது.


 
 
ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் ரூ.1-க்கு பிளாஷ் விற்பனையை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், மற்ற பொருட்களும் குறைந்த விலைக்கு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
 
இதன் படி ஜூலை 20 காலை 11.00 மணி மற்றும் மதியம் 1.00 மணிக்கு பிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் ரெட்மி 4A, வைபை ரவுட்டர் 2, எம்ஐ VR பிளே, 10,000 எம்ஏஎச் பவர் பேங்க், எம்ஐ செல்ஃபி ஸ்டிக் உள்ளிட்டவை ரூ.1-க்கு பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும்.