32 லட்சம் ஏடிஎம் கார்ட் ரகசிய தகவல் திருட்டு: காரணம் இது தான்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (10:29 IST)
இந்திய அளவில் 32 லட்சம் ஏடிஎம் கார்டுகளின் ரகசிய தகவல் திருடப்பட்டதற்கு, பாதுகாப்பு மென்பொருளில் ஊடுருவிய மால்வேர் தான் காரணம் என தெரியவந்துள்ளது.

 
 
சென்ற ஆண்டில், நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ஏடிஎம் கார்டுகளில், பெரும்பாலானவற்றின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது. 
 
இதன்பேரில், யெஸ் வங்கி, எஸ்பிஐ ஆகியவை, தங்களது வாடிக்கையாளர்களின் பழைய ஏடிஎம் கார்டுகளை தடை செய்துவிட்டு, புதிய கார்டுகளை வழங்கின.
 
இது குறித்து யெஸ் வங்கி நடத்திய விசாரனையில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான பாதுகாப்பு மென்பொருட்களில் திடீரென மால்வேர் எனப்படும் கணினி தீம்பொருள் குறிவைத்து, ஊடுருவியதாக தெரியவந்துள்ளது. 
 
இந்த மால்வேர் காரணமாகவே, ஏடிஎம் கார்டுகளின் ரகசிய தகவல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாகவும் யெஸ் வங்கி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :