புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:41 IST)

அதிரடியாக விலை குறைந்தது ரியல்மி 6 சீரிஸ்: எவ்வளவு தெரியுமா?

ரியல்மி நிறுவனத்தின் நியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதவாது ரியல்மி 6 சீரிஸ் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது. மாற்றப்பட்ட புதிய விலை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அப்டேட் ஆகியுள்ளது. 
 
ரியல்மி 6 6ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 14,999-ல் இருந்து ரூ. 13,999 ஆக மாறியுள்ளது. 
ரியல்மி 6 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 16,999-ல் இருந்து ரூ. 15,999 ஆக மாறியுள்ளது.
ரியல்மி 6 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999-ல் இருந்து ரூ. 16,999 ஆக மாறியுள்ளது.
ரியல்மி 6ஐ 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14,999-ல் இருந்து ரூ. 13,999 என மாறியுள்ளது.