1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (11:01 IST)

நெருக்கடியில் அனில் அம்பானி; ரூ.45,000 கோடி கடனில் தத்தளிக்கும் ரிலையன்ஸ்!!

கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தொலைத்தொடர்பு துறை கடந்த சில ஆண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியை சந்தித்து வருகிறது. 


 
 
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் தொலைதொடர்பு நிறுவனமான ஆர்.காம் ஜூன் காலாண்டில் ரூ.1,210 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
 
இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நிறுவனத்தின் வருமானம் 33 சதவீதம் சரிந்துள்ளது.
 
கடந்த ஆண்டு ரூ.5,361 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.3,591 கோடியாக சரிந்திருக்கிறது. அனில் அம்பானினியின் ஆர்.காம் நிறுவனத்துக்கு சுமார் ரூ.45,000 கோடி கடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.