ரூ.445 ரிசார்ஜ் திட்டம்: வோடோபோனில் புதியாய் என்ன இருக்கு??


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (13:45 IST)
ஜியோவுக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் வோடோபோன் நிறுவனம் புதிதாய் இணைந்துள்ளது. 

 
 
இந்த சலுகைகள் ஜியோ, ஏர்டெல் வழங்கிய சேவைகளை போன்றுதான் உள்ளது. சலுகைகளிலும், வேலிடிட்டியிலும் வித்தியாசம் ஏதுமில்லை.
 
வோடோபோன் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் படி வாடிக்கையளர்களுக்கு 84 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் அழைப்புகளும் வழங்கப்படவுள்ளது. வோடோபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள்  ரூ.445-க்கு ரீசார்ஜ் செய்து புதிய சலுகையை பெற முடியும். 
 
இந்த சலுகை மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரங்களில் உள்ள 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கூடிய விரைவில் இங்கும் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :