வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2017 (12:51 IST)

லட்ச கணக்கில் அதிகரித்த கள்ள பணம்: ஆர்பிஐ தகவல்!!

வங்கி அமைப்புகளில் கள்ள நோட்டிகளின் புழக்கம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது.


 
 
கள்ள பணத்தையும் கருப்பு பணத்தையும் ஒழிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்த வந்தாலும், அவை அனைத்தும் ஒரு கண் துடைப்பாகவே தெரிகிறது.
 
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் தோல்வியில் முடிந்ததாக பலரும் கருந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வங்கி அமைப்புகளில் புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி அடுத்த தகவலை வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது, கடந்த 2015-16 ஆம் நிதியாண்டை விட 2016-17 ஆம் நிதியாண்டில் வங்கி அமைப்புகளில் புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 7.62 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.