திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 மே 2020 (16:37 IST)

காஸ்ட்லி ஸ்டேட்டஸ் போதும்... பட்ஜெட் விலைக்கு இறங்கி வரும் ஒன்பிளஸ்!!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்பொன்களை அறிமுகம் செய்ய உள்ளது. 
 
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 2014 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் களமிறங்கியது. இப்போது 2020 ஆம் ஆண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 
 
பட்ஜெட் பிரிவில் ஒன்பிளஸ் வரவு சியோமி நிறுவனத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.