வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:55 IST)

84 நாட்களுக்கு, 84 ஜிபி; அதிரடி ஆஃபர்... ஆனால் ஏர்டெல் பிளான் வேறு!!

ஜியோ சலுகைக்கு போட்டியாக ஐடியா, வோடாபோன் மற்றும் ஏர்செல் புதிய சலுகைகளை வழங்கின. தற்போது ஏர்டெல் நிறுவனமும் இதில் சேர்ந்துள்ளது.


 
 
அனைத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு 84 நாள் வேலிடிட்டி திட்டத்தை வழங்கி வருகின்றன.
 
அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை 4ஜி சிம் கார்டுகளுக்கு மட்டும் வழங்கியுள்ளது. 
 
ரூ.399 திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் 84 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் அழைப்புகளை மேற்கொள்ள வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 
 
இதன் பின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஏர்டெல் எண்களுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.10 பைசா கட்டணமும், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.30 பைசா செலுத்த வேண்டும்.