அமேசான், வால்மார்ட், அலிபாபா: தெறிக்கவிடும் முகேஷ் அம்பானி!
ரிலையன்ஸ் நிறுவத்தின் தலைவராக இருந்த திருபாய் அம்பானி 2002 ஆம் ஆண்டு மறைந்த பிறகு தலைமை பொறுப்பினை முகேஷ் அம்பானி ஏற்று வழி நடத்தி வந்தார்.
ஆனால், 2005 ஆம் ஆண்டு பல சர்ச்சைகளுக்கு இடையில் தனது சகோதரர் அனில் அம்பானியுடன் சொத்தை இரண்டாக பிரித்துக்கொண்டார். தற்போது முகேஷ் அம்பானி வசம் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையம், ஜியோ நெட்வொர்க் மற்றும் மிகப் பெரிய ரீடையில் பிரிவு போன்றவை உள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கால் பதிக்க இருக்கும் நிலையில் அமேசான், வால்மார்ட், அலிபாபா போன்ற நிறுவனங்களைப் பீதியடைய செய்துள்ளது.
மேலும், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல் படி ஜாக் மாவின் சொத்து மதிப்பு 40.6 பில்லியன் டாலார உள்ள நிலையில், முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பு 45.3 பில்லியன் டாலராக உள்ளதால், தற்போது இவர் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உறுவெடுத்துள்ளார்.