பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளிய அமேசான் நிறுவனர்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கான பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலக பணக்காரா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 141.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அடுத்ததாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 92.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ஜெஃப் பெசோஸ்சின் சொத்துமதிப்பு ஜூன் 1ஆம் தேதியிலிருந்து சுமார் 5 பில்லியன் டாலர் உயர்ந்ததால், பில்கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். வாரன் பஃபெட், 82.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 22-வது இடத்தை பிடித்துள்ளார்
பில்கேட்ஸ் பல நூறு கோடி டாலர்களை மேல் அறக்கட்டளைக்கு கொடையாக அளித்துள்ளார். இல்லையெனில், அவர் இப்போதும் ஒப்பிடமுடியாத பணக்காரராக இருப்பார் என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.