1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (12:23 IST)

பிரபாஸின் முகத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியவர் யாருன்னு தெரியுமா?

'பாகுபலி' படத்தின் மூலம் பிரபாஸ் தனது நடிப்பை வெளிபடுத்தி உலக அளவில் புகழ் பெற்றவர். இவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது.

 
 
பாகுபலி, பாகுபலி-2 உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி போட்ட அனுஷ்காவுடன்காதல்  உருவானதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனவும் செய்திகள் பரவின.  இன்று வரை அந்த செய்தி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
தெலுங்கில் தயாராகி தமிழ், ஹிந்தி என டப் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்ற படம் பாகுபலி படத்தில் நடிகர்  பிரபாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை விட, ரசிகைகள்தான் அதிகம். அவர் கூட ஒரு பேட்டியில் பாகுபலி படத்திற்கு பிறகு தனக்கு  6000க்கும் அதிகமாக வரன்கள் வந்ததாக கூறினார்.
 
இந்நிலையில் இவரின் தீவிர ரசிகை ஒருவர், பிரபாஸின் முகத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியுள்ளார். தற்போது அந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.