மக்களே உஷார்... கிரிப்டோ ஜாக்கிங் - அரசு வலைத்தளங்களின் நவீன கொள்ளை
மால்வேர் மற்றும் வைரஸ் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டு பயனர்களின் தகவல்கள் திருடப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது அரசு வலைத்தளங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆம், மாநில அரசு வலைத்தளங்களை துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்கள் வரை ஹேக்கர்கள் கிரிப்டோ ஜாக்கிங் மூலம் கிரிப்டோ கரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் ஆந்திராவில் உள்ள திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைத்தளங்கள் ஹேக் செயய்ப்பட்ட போது வெளியாகியுள்ளது. இந்த ஹேக்கிங்கிற்கு காயின்ஹைவ் ஸ்க்ரிப்ட்டை ஹேக்கர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
அரசு சேவைகள் மற்றும் அரசு வெளியிடும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைத்தளங்களை பலரும் பயன்படுத்துவதால் ஹேக்கர்கள் அரசு வலைத்தளங்களையும் விட்டுவைக்கவில்லை.
அரசு வலைத்தளங்களில் மொனேரோ எனும் கிரிப்டோ கரென்சியை ஹேக்கர்கள் பயன்படுத்துகின்றனர். மொனேரோ வகையை சேர்ந்த கிரிப்டோ கரென்சியை டிராக் செய்வது மிகவும் கடினமான ஒன்று என்றும் தகவல் தெரிவிக்கின்றன.