1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (12:43 IST)

வருமான இழப்பு: இறங்கி வந்த மார்க்; இறங்கி வருமா நிறுவனங்கள்?

வருமான இழப்பின் காரணமாக மார்க் தனது முடிவில் சில மாற்றங்களை செய்வதாக உறுதியளித்துள்ளார்.  
 
அமெரிக்காவில் கறுப்பின் இளைஞர் பிளாய்டை போலீசார் கொன்ற போது அங்கு வன்முறைகளும் போராட்டங்களும் வெடித்தன. இதனை கண்டித்து அதிபர் ட்ரம்ப்,  கடைகளில் லூட்டிங் தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு தொடங்கும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.  
 
ட்ரம்ப்பின் இந்த பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. ஆனால், ஃபேஸ்புக் நிறுவனமோ  ட்ரம்பின் கருத்துக்களை நீக்கவில்லை. இதற்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்  என பதிவை நீக்காததற்கு மார்க் சக்கர்பெர்க் காரணமும் சொன்னார்.  
 
இதனைத்தொடர்ந்து யூனிலீவர், கோகோ கோலா, ஹோண்டா, லீவைஸ் ஜீன்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுப்பதை நிறுத்தியுள்ளனர். இதனால் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கிட்டதட்ட 54,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த இழப்பின் காரணமாக மார்க் தனது முடிவில் சில மாற்றங்களை செய்வதாக உறுதியளித்துள்ளார். அதாவது, தேர்தல் தொடர்பான அனைத்து பதிவுகளும் இனி குறியீடு செய்யப்படும். வேறு இனத்தவரை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கும் அனுமதி கிடையாது. இதில் எந்த அரசியல்வாதிக்கும் விலக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.