ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2017 (20:06 IST)

வெடித்து சிதறிய ஜியோ போன்: புகைப்படம் உள்ளே....

ரெட்மி. சாம்சங், ஆப்பிள் போன்ற மொபைல் போன்கள் வெடித்த செய்திகளை கேட்டுள்ளோம். தற்போது ஜியோ போனும் வெடித்தாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 


 
 
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ போனை இலவசமாக வழங்கி வருகிஅர்து. ஆனால், வைப்பு தொகையாக ரூ.1500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது. 
 
மூன்று ஆண்டுகளுக்கு பின் போனை திரும்ப கொடுத்தால் வைப்பு தொகை திரும்ப கிடைக்கும் என்றும் அறிவித்திருந்தது. இதை நம்பி 6 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோ போனை முன்பதிவு செய்துள்ளனர். 
 
இந்நிலையில், காஷ்மீரில் ஒருவர் வாங்கிய ஜியோ போன் வெடித்துள்ளது. போனின் பேட்டரி வெடித்து போன் முற்றிலும் நாசமாகவிட்டது. இந்த புகைப்படம் டிவிட்டரில் பதிவானது. பின்னர் டெலிட் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.