1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (13:17 IST)

இந்திய ரூபாய் பிணைக்கப்பட்ட பத்திரங்களின் சந்தை மதிப்பு 40.4% சரிவு!

2018ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் ஒட்டுமொத்த இந்திய பத்திர சந்தை 31% குறைந்துள்ளது.

 
2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், இந்திய வெளியீட்டாளர்களிடமிருந்து முதன்மை பத்திரம் வழங்கல் மொத்தம் 16.8 பில்லியன் அமெரிக்க டாலர். இது கடந்த ஆண்டை விட 30.8% குறைந்துள்ளது.
 
ஆக்ஸிஸ் வங்கி 27.3% பங்கு சந்தையுடன் முதலிடத்தில் உள்ளது. நிதிநிலை 79% பங்கு சந்தையை கைப்பற்றியுள்ளது. நிதித்துறையின் பங்கு சந்தை மதிப்பு 13.2 பில்லியன் அமெரிக்கா டாலர். இது கடந்த ஆண்டை விட 20.4% குறைவானது.
 
அரசு மற்றும் அதன் முகவர்கள் முதல் 3 துறைகளில் 7.2% பங்கு சந்தை பெற்றுள்ளனர். முதல் காலாண்டில் இந்திய ரூபாய்-பிணைக்கப்பட்ட பத்திரங்கள் மொத்த மதிப்பு ரூ.83,700 கோடி. இது கடந்த ஆண்டு முதல் காலண்டில் பெற்ற மதிப்பை விட 40.4% குறைவானது.