திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:05 IST)

2.5 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை: இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம்!!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் கடந்த 2014 ஆம் கால் பதித்தது. தற்போது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக இது உள்ளது.


 
 
நாள் ஒன்றிற்கு அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனமாக சியோமி உள்ளது. அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் 22,000 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 
 
தற்போது இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தை சியோமி பிடித்துள்ளது. ரெட்மி நோட் 4 இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் சியோமியின் ஸ்மார்ட்போனாக உள்ளது.
 
கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை ஆகியுள்ளது. மேலும், இதுவரை 2.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.