செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (17:24 IST)

தலைக்கு தில்ல பாத்தியா... ராவோடு ராவா ஹுவாய் செய்த காரியம்!!

ஹூவாய் நிறுவனம் இரவோடு இரவாக தனது மூன்று படைப்புகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியையும் ஸ்மார்ட்போன் அறிமுகத்தையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 
 
ஆனால், ஹூவாய் நிறுவனம் நேற்று இரவு ஆன்லைன் வழியாக தனது மூன்று புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.  ஹூவாய் பி40, ஹூவாய் பி40 ப்ரோ மற்றும் ஹூவாய் பி40 ப்ரோ+ ஆகியவையே இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் ஆகும். 
இதோடு இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம், விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.