செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (15:34 IST)

செப்.27 முதல் சியோமி தீபாவளி அதிரடி!!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தீபாவளி பண்டிக்கைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.


 
 
வரும் 27 ஆம் தேதி காலை முதல் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சலுகை 29 ஆம் தேதி வரை நடைபெறும்.
 
அதன்படி 2.00 மற்றும் மாலை 6.00 மணிக்கு இந்த சலுகை வழங்கப்படும். மேலும், mi டோக்கன்களை கொண்டு சலுகை கூப்பன்களை பெற முடியும்.
 
அதோடு சியோமி வழங்கும் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.1 பிளாஷ் விற்பனை தினமும் காலை 11.00 மணி மற்றும் மாலை 5.00 மணிக்கும் நடைபெறும்.
 
ரூ.8000 அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம்.  
 
சியோமி ரெட்மி 4, மி மேக்ஸ், ரெட்மி 4ஏ, ரெட்மி நோட் 4 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த சிறப்பு தள்ளுபடி ஆபர் மூலம்குறைந்த விலையில் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.