இனி ஃபேஸ்புக் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்யலாம்

Cooking Gas
Last Updated: சனி, 23 டிசம்பர் 2017 (17:45 IST)
சமூக வலைதளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

 
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றனர். எரிவாயு சிலிண்டர்கள் தொலைப்பேசி மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் முறை ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது.
 
இந்நிலையில் வடஇந்தியாவில் தற்போது சமூக வலைதளங்கள் மூலமாக முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த முறை விரைவில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறையால் கள்ளச்சந்தையில் எரிவாயு சிலிண்டர் விற்கப்படுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :