1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 நவம்பர் 2017 (18:54 IST)

ஒரே நேரத்தில் ஃபேஸ்புக் லைவ்-இல் வரும் நான்கு ராணிகள்

சமீபத்தில் ஃபேஸ்புக் லைவ் வசதி வந்தபின்னர் திரைநட்சத்திரங்கள் பலர் ஃபேஸ்புக் லைவ்-வில் வந்து ரசிகர்களிடம் உரையாடி வருவதை பார்த்திருக்கின்றோம். இந்த நிலையில் ஒரே நேரத்தில் நான்கு பிரபல நடிகைகள் ஃபேஸ்புக் லைவ்-வில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் வித்யாபாலன் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் 'குவீன்' என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் தற்போது தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரீமேக் செய்யபப்ட்டு வருகிறது. வித்யாபாலன் நடித்த கேரக்டரில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் கன்னடத்தில் பரூல் யாதவ்வும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நான்கு குவீன் நடிகைகளும் நாளை மதியம் 12 மணிக்கு ஃபேஸ்புக்கில் லைவ்-வில் வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் இருந்து ஃபேஸ்புக் லைவ்-இல் வரும் நான்கு நடிகைகளிடம் ரசிகர்கள் தங்களுக்குள்ள கேள்விகளை கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.