வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (17:26 IST)

சமாதானத்துக்கு வந்த அமெரிக்கா! – வரியை குறைத்த சீனா!

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா – சீனா இடையே நிலவி வந்த வணிக போர் தற்போது சமாதான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பங்கு வகித்து வரும் நாடுகளான சீனாவுக்கு, அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வணிக போர் உச்சத்தில் இருந்தது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் வரி விதிப்பை அதிகரித்து கொண்டு சென்றது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பொருளாதார சண்டை ஓயாத நிலையில் அமெரிக்க சமாதானத்துக்கான முதல்படியை எடுத்து வைத்துள்ளது.

அதன்படி சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகாமன வரியிலிருந்து 15 சதவீதத்தை குறைத்தது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த சமாதான ஒப்பந்தத்துக்கு வழிக்கு வந்த சீனா தற்போது அமெரிக்க பொருட்களுக்கு அதிகரிக்கப்பட்ட வரியிலிருந்து 10 சதவீதத்தை குறைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த சமாதான போக்கால் வரிவிகிதங்கள் குறைந்து வருவதால் இரு நாட்டு வணிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.