1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (11:16 IST)

ரூ.10,000 வரை தள்ளுபடி: சோனி ஸ்மார்ட்போன் மீது அதிரடி சலுகை!

சோனி நிறுவனத்தின் பிரபல மாடல் ஸ்மார்ட்போனான சோனி எக்ஸ்பீரியா மீது ரூ.10,000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இந்தியாவிலும் பொருந்தும். 
 
கடந்த ஆண்டும் ஜூலை மாதல் அறிமுகமான எக்ஸ்பீரியா XZ பிரீமியம் ஸ்மார்ட்போன் மீது இந்த விலை குறைப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.49,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஆனால், சோனி எக்ஸ்பீரியா XZ பிரீமியம் மாடல் ரூ.59,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் மற்ற சில சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 
எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா XA1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு உள்ளது. 
 
இந்த அதிரடி விலை குறைப்புக்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதாவது, ஸ்மார்ட்போன்கள் சரியாக விற்பனையாகாத நிலையில், தயாரித்த ஸ்மார்ட்போன்களை விற்று தீர்க்க அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும், சமீபத்தில் சோனியின் எக்ஸ்பீரியா XZ2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.