ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (17:17 IST)

1 ரூபா-க்கு இவ்வளவு கிடைக்குமா? திக்குமுக்காட வைத்த பிஎஸ்என்எல்!!

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வந்த ரூ.186 மற்றும் ரூ.187 ஆகிய இரண்டு ரீசார்ஜ் மீது சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 
 
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நெட்வொர்க் நிருவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல ஆஃபர்களை அறிவித்து வருகிறது. சில சமயங்களில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆஃபர்களில் சில மாற்றங்களையும் கொண்டு வருகிறது.
 
அந்த வகையில் தற்போது ரூ.186 மற்றும் ரூ.187 ப்ளான்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஆம், இவ்விறு ப்ளான்களில் 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
2 ஜிபி டேட்டா அளவு காலியானதும் இணையத்தின் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். ரூ.186 மற்றும் ரூ.187 என இரண்டு பிளான்களிலும் கிட்டதட்ட ஒரே விதமான பயன்கள்தான் வழங்கப்படுகிறது. ஆனால், ரூ.187-க்கு ரீசார்ஜ் செய்யும் போது காலர் பேக் ரிங் டோன் வழங்கப்படுகிறது.