1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. BSNL to give 4 per cent discount to users recharging for other BSNL users valid till May 31

கேஷ் பேக் பக்கம் ரூட்டை மாற்றிய BSNL!!

4 per cent discount
பிஎஸ்என்எல் நிறுவனம் ரீசார்ஜ் செய்யும் போது நான்கு% தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. 
 
முன்னதாக வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்ற எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்தன. 
 
இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்கள் மற்ற பிஎஸ்என்எல் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது நான்கு % தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. 
 
மை பிஎஸ்என்எல் செயலிக்கான 2.0.46 அப்டேட்டில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை மே 31 ஆம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க இதுதான் நேரம்! – குழு அமைத்த எடப்பாடியார்!