செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (17:21 IST)

இனி “ஜெய் ஹிந்த்” அல்ல, “ஜியோ ஹிந்த்” தான்.. மோடியை பங்கமாய் கலாய்க்கும் கம்யூனிஸ்ட் தலைவர்

மோடி இனிமேல் ”ஜெய் ஹிந்த்” என்று முழங்கமாட்டார், “ஜியொ ஹிந்த்” என்று தான் முழங்குவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் வருகிற 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வினோத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு உதவுவதற்காக, அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கைகள் இருந்தன. மோடியின் முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெய் ஹிந்துக்கு பதிலாக ஜியோ ஹிந்தாக மாறிவிட்டது என கூறினார்.

மேலும் நாட்டையும் அதன் குடிமக்களையும் காப்பாற்ற பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறினார்.