திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2017 (14:49 IST)

6 அடி உயரம்: டெஸ்டிங்கில் தோல்வி அடைந்த ஐபோன் X!!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் X தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது ரூ.85,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.


 
 
இந்நிலையில், ஸ்கொயர் டிரெட் என்ற காப்பீட்டு நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை சோதனை செய்துள்ளது.
 
அப்போது, ஐபோனை ஆறடி உயரத்திலிருந்து பக்கவாட்டில் கீழே போட்டு சோதனை நடத்தினார். அதில் போனின் பின்புறம் முழுவதும் சேதமடைந்தது மற்றும் திரை செயல் இழந்தது. 
 
ஐபோன் X நீரில் சோதனை செய்தபோது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐபோன் X திரை சேதமடைந்தால் அதைச் சரிசெய்ய முந்தைய மாடல்களைக் காட்டிலும் இரு மடங்கு செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.