செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2017 (13:31 IST)

வருமான வரித்துறை சோதனை: கோவையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

வருமான வரித்துறை சோதனை: கோவையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

தமிழகம் முழுவதும் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வியாழக்கிழமை காலையில் தொடங்கிய சோதனை இன்று நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.


 
 
இந்த சோதனை தற்போது படிப்படியாக ஒவ்வொரு இடங்களிலும் முடிந்து வருகிறது. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவையில் தொழிலதிபர் ஓ.ஆறுமுகசாமி மற்றும் மர சாமான்கள் விற்பனை நிறுவன அதிபர் சஜீவன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் மூன்று நாட்களாக சோதனை நடைபெற்றது.
 
இங்கும் சோதனை முடிந்துள்ள நிலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்து பைகள் மற்றும் அட்டை பெட்டிகளில் வைத்து அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆறுமுகசாமியிடம் நடத்திய விசாரணை நேரத்தைவிட சஜீவனிடம் அதிக நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 
ஓ.ஆறுமுகசாமி, மற்றும் சஜீவனிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்த விசாரணை விரைவில் துவங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.