1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (21:12 IST)

ஆப்பிள் ஐபோனில் டூயல் சிம்: உண்மையா??

ஆப்பிள் நிறுவனத்தின் சீன வல்லுநர் 2018 ஆம் ஆண்டு வெளியாகவிருக்கும் ஐபோன் மாடல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 


 
 
புதிய ஐபோன்களில் 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளேக்களும், பட்ஜெட் விலையில் 6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இருக்க கூடும். 
 
அதிவேக இன்டெல் XMM 7560 மோடெம், குவால்காம் SDX 20 LTE cat மோடெம் கொண்டிருக்கும். இவை சிப்செட்கள் 4x4 MIMO தொழில்நுட்பத்தில் இயங்கும்.
 
2017 ஆம் ஆண்டு ஐபோன்களில் வழங்கப்பட்டதை விட இரு மடங்கு வேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் 70 முதல் 80 சதவிகித 2018 ஐபோன்களில் இன்டெல் சிப்செட் வழங்கப்படும். அதோடு டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.