வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (12:02 IST)

ரூ.10,000 வரை கேஷ்பேக்: ஆப்பிள் அதிரடி ஆஃபர்!

ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆப்பிள் சாதனங்களை பெருவோருக்கு ரூ.10,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. 
 
சிட்டி கார்ப்பரேட் கார்டுகளை தவிர இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சிட்டி பேங்க் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தி இந்த சலுகையை பெற முடியும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. 
 
இந்த ஆஃபரில், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் மேக்புக் சாதனங்களை வாங்கலாம். இந்த சலுகை இன்று துவங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். 
 
அனைத்து வித ஐபேட் சாதனங்களுக்கும் ரூ.5,000 வரை கேஷ்பேக், அனைத்து வித ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
இதேபோன்று ஆப்பிள் பென்சில் வாங்குவோருக்கு ரூ.1,000 கேஷ்பேக்,  அதே போல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மேக்புக் வேரியன்ட்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
 
கேஷ்பேக் சலுகை ஒரு கிரெடிட் கார்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். கேஷ்பேக் தொகை முதல் 90 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.