வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (21:11 IST)

ஒரே காட்சியில் உருவான முழுநீளத் திரைப்படம் – தடயம்

ஆனந்த விகடன் வார இதழில் வெளியான “தடயம்” சிறுகதையை கருவாகக் கொண்டு தடயம் படம் ஒரே காட்சியில் உருவாக்கி உள்ளார்கள். எழுத்தாளர் தமயந்தி இப்படத்தை இயக்கி வருகிறார்.
 
இப்படத்தின் கதாநாயகியாக கனி குஸ்ருதி நடித்திருக்கிறார்.  கதாநாயகனாக கணபதி முருகேசன் அறிமுகமாகிறார்.  இசையமைப்பாளராக ஜஸ்டின் கெனன்யா அறிமுகமாகிறார். ப்ரவீன் பாஸ்கர் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
 
காதல் நினைவுகளால் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான். அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. 
 
காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையாக தடயம் படத்தை உருவாக்கி உள்ளார்கள்.
 
“கிரவுட் ஃபண்டிங்” தயாரிப்பில் உருவாகியிருக்கும் “தடயம்” விரைவில் திரைக்கு வர இருக்கிறது.