1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (14:43 IST)

ரூ.100-க்கும் குறைவான விலையில்... ஜியோ Sachet Packs!

ஜியோவிற்கு போட்டியாக மற்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியவை தொடர்ந்து புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
 
சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சில சலுகைகளை அறிவித்தது. அதன் பின்னர், மாத ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.50 வரை குறைத்தது. இந்நிலையில் தற்போது Sachet Packs என்ற பெயரில் மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த ரீசார்ஜ் சலுகை ரூ.100-க்கும் குறைவான விலையில் வழங்கப்பட்டுள்ளது. அவை, ரூ.19, ரூ.52 மற்றும் ரூ.98 ரீசார்ஜ் ஆகும். 
 
# ரூ.19-க்கு ரீசார்ஜ் செய்யும் போது, 0.15 GB 4G டேட்டா, இந்தியா முழுக்க அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 20 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்ட ஒரு நாள்.
 
# ரூ.52-க்கு ரீசார்ஜ் செய்தால், 1.05 GB 4G டேட்டா, ரோமிங் உட்பட அன்லிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 70 எஸ்எம்எஸ் ஆகியவை 7 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். மேலும் இதில் ஜியோ ஆப்ஸ் சேவையும் கிடைக்கும். 
 
# ரூ.98-க்கு ரீசார்ஜ் செயும் போது, 2.1 GB 4G டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 140 எஸ்எம்எஸ் ஆகியவை 14 நாட்களுக்கு கிடைக்கும். மேலும், நாள் ஒன்றிற்கு 0.15 GB பயன்படுத்திய பின்னர் டேட்டா வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.