காவிரி பிரச்சனையில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உதவுகிறது: கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
காவிரி வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்ததன் மூலம், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உதவுவதாக தோன்றுகிறது எனா மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனையின் தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. அதன்பின்னர் மீண்டும் ஒருவாரம் ஒத்திவைத்தால் கர்நாடக மாநில தேர்தல் முடிந்துவிடும். அதன் பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்கலாம் என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு உச்சநீதிமன்றம் உதவி செய்து செய்துள்ளதாக ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சட்டையே மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களும் கூறியுள்ளார்.
ஆனால் காவிரி பிரச்சனை சரியான தீர்வை நோக்கி சட்டரீதியான நகர்வில் மத்திய அரசு சென்று கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.