2016 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்!!
2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் வேளையில் 2016-ல் சந்தையை கலக்கிய மக்களின் மனதில் பூரணத்தை ஏற்படுத்திய சிறந்த போன்களின் பட்டியல் இதோ...
2016 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்:
ஐபோன் 7 ப்ளஸ்:
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நம்பகமான தலைமை ஐபோன் 7 பிளஸ். தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு வடிவமைப்பு, இரட்டை பின்புற கேமரா அமைப்பு, வைட் ஆங்கிள் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ், 2X ஆப்டிகல் ஜூம் மற்றும் 10x டிஜிட்டல் ஜூம் என ஒரு அட்டகாசமான கருவியாக இது திகழ்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ்:
வளைந்த எட்ஜ் டிஸ்ப்ளேவில் கண்ணாடி மற்றும் உலோக வடிவமைப்பு, கொண்ட ஒரு பிரீமியம் தலைமை ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்7 எட்ஜ். பேட்டரி திறன், கேமிரா துறை, விலை என அனைத்திலும் எடைக்கு எடை இதற்கு இதுவே சமம்.
2016 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்:
கூகுள் பிக்சல்:
கூகுள் அதன் சொந்த பிக்சல் தொடர் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் என அதன் இரண்டு பிரீமியம் கருவிகளை 2016 அக்டோபர் மாதம் வெளியிட்டது.
ஒன் ப்ளஸ் 3:
கேமிரா, ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுள் என இந்த ஸ்மார்ட்போன் ஒரு முழுமையான தலைமை கருவியாகவே வெளியானது.