வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சு‌ற்று‌ச்சூழ‌ல்
Written By
Last Modified: ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (19:46 IST)

இயற்கையின் அற்புத வாண வேடிக்கைக்காக மக்கள் காத்திருக்கின்றனர்

இந்த வருடத்தின் மிகப் பெரிய எரிகல் மழை என்று எதிர்பார்க்கப்படும் எரிகல் தோன்றும் நிகழ்வுக்காக உலகெங்கும் வான அவதான ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.



ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என்று சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும்.
 
விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாவதால் ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஸ்வாணம் போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும்.
 
மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணுக்கே இந்த எரிகல் மழை தென்படும்.
 
இயற்கையாகத் தோன்றும் அற்புதமான வாண வேடிக்கையாக இந்த எரிகல் மழை அமையுமென வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.