இனி சென்னை - பெங்களூரு 1 மணி நேரம் தான்.. சென்னை - ஐதராபாத் 3 மணி நேரம் தான்.. அதிவேக ரயில் அறிமுகம்..
மத்திய பட்ஜெட் 2026-ல் தமிழகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் மிக முக்கியமானது, "தெற்கு அதிவேக முக்கோணம்" எனும் பிரம்மாண்ட ரயில்வே திட்டமாகும்.
சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று முக்கிய பொருளாதார மையங்களை இணைக்கும் இத்திட்டத்தின் மூலம், நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் நம்பமுடியாத அளவில் குறைய உள்ளது.
குறிப்பாக, தற்போது வந்தே பாரத் ரயிலில் 4 மணிநேரம் வரை நீடிக்கும் சென்னை - பெங்களூரு பயணத்தை வெறும் 1 மணிநேரம் 13 நிமிடங்களாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதேபோல், சென்னை மற்றும் ஹைதராபாத் இடையிலான பயணமும் 2 மணிநேரம் 55 நிமிடங்களாக குறையும். இந்த அதிவேக ரயில் திட்டங்கள் வெறும் பயண நேரத்தை மட்டும் குறைக்காமல், தென்மாநிலங்களின் வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சியை பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva