Daily Horoscope
✕

அரபிக்கடலில் நாளை உருவாகிறது "ஷகின்" புயல்!

Written By Papiksha Joseph
Updated: வியாழன், 30 செப்டம்பர் 2021 (12:12 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவான நிலையில் அது ‘குலாப்’ புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கரையை கடந்து அரபிக்கடலை அடைந்து நாளை வலுப்பெறுகிறது
 
எனவே அரபிக்கடலில் நாளை  புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. இந்த புதிய புயலுக்கு ஷகின் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே இந்திய மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

எல்லாம் காட்டு

இதற்காகத்தான் கொள்ளையடித்தேன்!.. நிஷாந்த் வாக்குமூலம்...

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா ஒத்தி வைப்பு.. பின்னணி என்ன?..

1 மணி நேரத்தில் 1 கோடி கொள்ளை!.. வங்கி கணக்கை ஹேக் செய்த கும்பல்...

திருச்சி செல்லும் முதல்வர் விஜய்!.. இடைத்தேர்தல்தான் காரணமா?..

முதுமலை காட்டில் டிரக்கிங்!.. சர்ச்சைக்கு விளக்கமளித்த வன்னியரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments