பொறியியல் படித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி

Ashok| Last Updated: சனி, 26 செப்டம்பர் 2015 (18:40 IST)
மத்திய அரசின் கீழ் மேற்கு வங்கா மாநிலம், பர்ன்பூரில் இயங்கி வரும், இரும்பு உற்பத்தியில் முன்னனி நிறுவனமான செயில் நிறுவனத்தில் (Steel Authority of India Limited (SAIL) ) 27 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள் :

1. Operations - 12

2. Mechanical - 08

3. Electrical – 07


தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : www.sail.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

DGM (Personnel-CF), SAIL-IISCO Steel Plant, 7, the Ridge, Burnpur - 713325. Burdwan District.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2015

இந்த பணிக்குறித்து மேலும் விவரங்களை அறிய //103.241.144.145/pdf/Advt%20Dy%20Mangers.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.இதில் மேலும் படிக்கவும் :