வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (18:05 IST)

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ’ஏ’ படமா...

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் அடுத்த படைப்பாக வெளியாகயுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 
 
சூப்பர் டீலக்ஸ் 29 ஆம் தேதி வெளியாகயுள்ள நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. ஏ சான்றிதழ் என்பது பெரிதும் வன்முறை, ஆபாசம், ஆபாச மொழி ஆகியவை அதிகமகா இருக்கும் படத்திற்கு கொடுக்கப்படுவதாகும். 
 
விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி, ஆபாச நடிகையாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். 
 
இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால், இது விஜய் சேதுபதியின் முதல் ஏ சான்றிதழ் படமாக மாறியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.