வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By

சொரியாசிஸ் தொற்று நோய் பாதிப்பு உடையதா?

சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும். தோலிலுள்ள பல சிறு இரத்த  நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.
சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை / சிவப்பு திட்டுகளாக (Silver Scaly  patches) காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள்  பொதுவாக பாதிக்கப்படும்.
 
சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்கு பரவாது சுகாதார குறைவு காரணமாக இது ஏற்படாது. சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல்  நிலை இவற்றின் பாதிப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேர் சொரியாசிஸ் நோயுடைய  குடும்பத்திலிருந்து வந்தவர்களே, சிலருக்கு மரபு நிலை காரணமாகிறது.
 
உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டி ஹைபர் டென்சிவ் போன்ற சில மருந்துகள், சோரியாசிஸை மேலும் மோசமாக்கும். குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கும். சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் வரலாம்.  சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும், நகங்கள் தடிப்பையும், ஏற்படுத்தும்.