பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கான காரணங்கள்...!

பெண்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்கள் பல உண்டு. அவைகளில் வெள்ளைப் படுவதும் ஒன்று. இந்த நோய் திடீரென ஒரு நாளில் தோன்றுவதல்ல. இது  பெண்களின் பிறப்புறுப்பில் தோன்றும் மோசமான நோய். இதை ஆரம்பத்திலேயா இனம் கண்டு குணப்படுத்தாவிட்டால் கடைசியில் பெரும் சிக்கலான நிலைக்கு  தள்ளிவிடும்.
 
இந்த நோய் கருப்பையின் உட்பகுதி சுவரிலிருந்தோ பிறப்பு உறுப்புகளின் சதைப் பகுதிகளிலிருந்தோ வெள்ளையான சளி போன்ற பிசுபிசுப்பான திரவம்  வெளிவருவதை வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது.
 
நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
 
பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப் படுதல் இருக்கும்.
 
ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.
 
அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
 
தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.
 
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
 
அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
 
அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
 
இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே  மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.


இதில் மேலும் படிக்கவும் :