திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By ஏ.சினோஜ்கியான்
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (23:12 IST)

தீபாவளிக்கு பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது !

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

அரசும் மக்கள் பண்டிகையைக் கொண்டாட அவரவர் ஊர்களுக்குச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ரயிலில் பட்டசு எடுத்துச் செல்லக் கூடாது என ரயில்வேதுறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத்தண்டனையும் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

அதனால் மக்களே ரயிலில் பட்டாசுகளை எடுத்த்துச் செல்லாமல் அரசின் உத்தரவுக்கு கீழ் படிந்து நடக்கலாம்.