செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:57 IST)

ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா !

ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில்  2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 5 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ரிஸ்க் நாடுகளில் இருந்து இந்திய வந்த 16000 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் 18 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 18 பேரிம் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது