செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:17 IST)

சர்ச்சையைக் கிளப்பிய கோலியின் விக்கெட்!

இந்திய அணியின் கேப்டன் கோலியின் எல் பி டபுள் யு விக்கெட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது வரை 165 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் 90 ரன்களோடு களத்தில் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து ஆடிவருகிறார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தலைமையேற்று வந்து ஆடிய கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில் அவரின் எல் பி டபுள் யு விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பந்து கோலியின் பேட் மற்றும் கால் காப்பு என இரண்டிலும் ஒரே நேரத்தில் பட்டது போல ரிப்ளேவில் தெரிந்தது. இதனால் தெளிவான முடிவு எடுக்க முடியாத மூன்றாவது நடுவர் கள நடுவர் கொடுத்த விக்கெட் என்ற முடிவையே கொடுத்தார். ஆனால் ரசிகர்கள் இந்த முடிவு குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.