நியூசிலாந்து அதிர்ச்சி தோல்வி: அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்ட பாகிஸ்தான்

Last Modified வியாழன், 27 ஜூன் 2019 (06:00 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் இதுவரை தோல்வியே அடையாமல் தொடர் வெற்றி பெற்று வந்த நியூசிலாந்து அணி முதல்முறையாக நேற்று பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றியால் அந்த அணிக்கு 7 புள்ளிகள் கிடைத்துள்ளது. எனவே அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. நேற்றைய போட்டியில் பாபர் அசாம் மிக அபாரமாக பேட்டிங் செய்து சதமடித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்

ஸ்கோர் விபரம்:
நியூசிலாந்து: 237/6

நீஷம்: 97
கிராந்தோம்: 64
வில்லியம்சன்: 41


பாகிஸ்தான் : 241/4

பாபர் அசாம்: 101
ஹரிஸ் சோஹாலி: 68
முகமது ஹசீஃப்: 32

இன்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை தோல்வியே அடையாமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இன்றைய போட்டியிலும் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :