திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (17:42 IST)

நியூஸிலாந்துக்கு என்னதான் ஆச்சு???

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நியூஸ்லாந்து-பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கி ஆடிக்கொண்டிருக்கிறது.

தற்போது நியூஸ்லாந்து அணி 21 ஓவர்களுக்கு 68 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

மிகவும் பலம் வாய்ந்த நியூஸ்லாந்து அணி, தற்போது பாகிஸ்தானிடம் முதல் 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரரான மார்டின் குப்தில், 4 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்ததாக கோலின் முன்ரோ இரண்டு பவுண்டரிகளை தட்டிவிட்டு, 17 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ராஸ் டெயிலர் 3 ரன்களிலும், டாம் லாதம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். தற்போது ஜேம்ஸ் நீசம் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் களத்தில் ஆடிகொண்டிருக்கின்றனர்.

மிகவும் பலமான அணியான நியூஸிலாந்து, பலவீனமான பாகிஸ்தான் அணியுடன் தடுமாறிக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் ஆட்டம் இனி எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.