வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (16:20 IST)

2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு: உறுதிப்படுத்துமா பிசிசிஐ?

2019 உலகக் கோப்பை தொடரோடு தோனி ஓய்வு பெற உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இந்திய அணி முக்கியமான அனுபவமிக்க வீரர் மகேந்திர சிங் தோனி. இவர் மீது சமீப காலக்கட்டத்தில் எப்போதும் விமர்சனங்கள் வந்துக்கொண்டேதான் இருக்கின்றன. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தோனி அதை கண்டுக்கொள்ளாமல் போட்டியில் கவனம் செலுத்துவது வழக்கம். விமர்சனங்களை தாண்டி தோனி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். 
 
தோனியின் மீதான விமர்சனங்களை தவிர்த்து அவரது ஓய்வு குறித்தும் பல செய்திகள் அவ்வப்போது வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் பிடிஐ செய்தி நிறுவனம் தோனி உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெற உள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது. 
பிடிஐ தெரிவித்ததாவது, 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியோடு தோனி ஓய்வுபெற உள்ளார் என தெரிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தரப்பிலோ அல்லத்து தோனியின் தரப்பிலோ எந்த தகவலும் வெளியாகவில்லை. 
 
அப்படி இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கர் எப்படி உலகக்கோப்பை முடிந்த பிறகு ஓய்வை அறிவித்தாரோ அதேபோல் தோனி அறிவிக்கக்க கூடும் என தெரிகிறது.