புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (12:04 IST)

ஐசிசியின் பவுண்ட்ரி விதி ஏமாற்றத்தை தருகிறது: கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் கடும் கண்டனம்

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், நியூஸிலாந்து இழக்க காரணமாக இருந்த பவுண்ட்ரி விதிகளுக்கு கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா, ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு சரி நிகராக ஆடியும், கூடுதல் பவுண்டரி விதியால் நியூஸிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இதனை குறித்து பல ஐசிசி கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐசிசியின் பவுண்ட்ரி விதிகளைக் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்த விதியை முற்றிலும் ஏற்கமுடியாது எனவும், இந்த விதியால் நியூஸிலாந்து அணிக்கு ஏற்பட்ட நிலைக்கு தனது மனதில் வேதனை எழுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், ”இறுதி ஆட்டத்தில், யார் அதிக பவுண்ட்ரிகளை அடித்துள்ளார்கள் என்ற விதியின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது” என கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, இந்த விதி தற்காலத்திற்கு பொருந்தாது எனவும், இதனை உடனே நீக்க திவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இவர்களை தொடர்ந்து ஐசிசியின் பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான பிரெட் லீ, ஜோன்ஸ், டியான் நாஷ் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.