அம்பத்தி ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு அதிர்ச்சியான காரணம் இதுதான்!

Last Updated: புதன், 3 ஜூலை 2019 (13:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான அம்பத்தி ராயுடுவுக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அம்பத்தி ராயுடு அதிருப்தியில் இருந்தாலும், அவரது பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால் வீரர்கள் யாராவது காயம் அடையும் பட்சத்தில் அவர் அணியில் சேர்த்து கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் தவான், புவனேஷ்குமார், விஜய்சங்கர் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டபோதிலும் அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மயங்க் அகர்வால் தற்போது அணியில் இணைந்துள்ளது அம்பத்தி ராயுடுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு சற்றுமுன் அதிரடியாக அறிவித்துள்ளார். 33 வயதான அம்பத்தி ராயுடு ஓய்வுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை
இந்த நிலையில் ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணி அம்பத்தி ராயுடுவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதால் அவர் அந்த அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :