நேற்றைய இந்தியாவின் இலக்கும், இன்று இலங்கை அடித்த ரன்களும்...

Last Modified திங்கள், 1 ஜூலை 2019 (19:22 IST)
நேற்று இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி கொடுத்த 338 ரன்கள் தான் இன்று இலங்கை அணி மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் அடித்த ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 39வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது

இலங்கை அணியின் பெர்னாண்டோ அதிரடியாக விளையாடி 104 ரன்களும், பெரரே 64 ரன்களும், திரமின்னே 45 ரன்களும், மெண்டிஸ் 39 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 338 ரன்கள் குவித்துள்ளது.
இன்னும் சில நிமிடங்களில் 339 என்ற இலக்கை நோக்கி மே.இ.தீவுகள் அணி பேட்டிங் செய்யவுள்ளது. கெய்ல், ஹோப், அம்ப்ரோஸ், பூரன், ஹோல்டர் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் மே.இ.தீவுகள் அணியில் இருந்தாலும், இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து இலக்கை எட்டுமா மே.இ.தீவுகள் அணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்இதில் மேலும் படிக்கவும் :