வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (18:23 IST)

நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிரபல வீரர்

new zealand team
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் விலகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அணியின் முக்கிய அணியாக உள்ளது நியூசிலாந்து. தற்போது, இந்த அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி-20, ஒரு நாள் உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்த  நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து, பிரபல வீரர் மார்டின் கப்தில் விலகியுள்ளார்.

இவர், டி-20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் இடம்பெற்று திறமையை வெளிப்படுத்தினார்.
new zealand

இந்த நிலையில்,  நியூசிலாந்து கிரிக்கெட் போர்டில், ஏற்கனவே, போல்ட், காலின் டி கிரராண்ட்ஹோம் ஆகியோர் மத்திய ஒப்பந்தத்தில் ( NYC)இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது, கப்திலும் விலகியுள்ளார். அவரது சொந்த விருப்பத்திற்கு நியூசிலாந்து அணி ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

Edited by Sinoj